BREAKING NEWS

ஓசூர் அருகே, உரிய அனுமதியின்றி எருதுவிடும் பரிசு பண்டிகை நடத்திய கிராம மக்கள் .

ஓசூர் அருகே, உரிய அனுமதியின்றி எருதுவிடும் பரிசு பண்டிகை நடத்திய கிராம மக்கள் .

ஓசூர் அருகே, உரிய அனுமதியின்றி எருதுவிடும் பரிசு பண்டிகை நடத்திய கிராம மக்கள் மீது போலிசார் வழக்குப்பதிவு: போலிசாரே தடுக்காமல் பாதுகாப்பு வழங்கி, மாலையில் வழக்குப்பதிவு.கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பெரியபள்ளம் கிராமத்தில் நேற்று தேர்தல் விதிகள் அமலில் உள்ளபோதும் எருதுவிடும் பரிசு பண்டிகை நடைப்பெற்றது..

இந்த பரிசு பண்டிகையில் காளை மாடுகள் உரிமையாளர்கள் பணம் செலுத்தி டோக்கன் வாங்கிய பிறகே அனுமதிக்கப்பட்டது. 365 காளைகள் பங்கேற்ற இந்த பண்டிகையில்
வரிசையாக ஒவ்வொரு மாடுகளும் அவிழ்க்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை குறைந்த விநாடிகளில் கடக்கும் மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

முதல் பரிசாக 1.50 லட்சம் ரூபாய் முதல் கடைசி பரிசாக 5000 ரூபாய் என 70 பரிசுகள் வழங்கப்பட்டது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை நடைப்பெற்ற இந்த எருதுவிடும் விழாவில் நூற்றுக்கணக்கான காளை மாடுகள் பங்கேற்றன.காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறை ரீதியாக எந்த அனுமதியும் வாங்கப்படாமல் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளபோதே மோலிசாரின் பலத்த பாதுகாப்புடன் நடைப்பெற்றது.

நேற்று தடுக்காமல் பாதுகாப்பு வழங்கிய போலிசார், மாலை காவல் நிலையம் வந்து அனுமதியின்றி நடந்ததாக பெரியபள்ளம் கிராமத்தை சேர்ந்த திருப்பதி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS