ஓசூர் பகுதியில் தொடர் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 சிறார்கள் போலீசாரால் கைது. விலை உயர்ந்த 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக போலீசாருக்கு புகார் வந்தது. புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமான ஜிபிஆர்எஸ் கருவி உதவியுடன் அதனைப் பொருத்தி இருந்த இருசக்கர வாகனம் ஒன்றை போலீசார் கண்டுபிடித்த நிலையில் அதனை திருடிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் 17 வயது நிரம்பிய ஓசூர் மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களும் ஆன்லைன் விளையாட்டின் வாயிலாக நட்பு ஏற்பட்டு இருவரும் சேர்ந்து விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடி அவற்றை அடகு வைத்து வந்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் அளித்த தகவலின் பெயரில் அடகு வைக்கப்பட்டிருந்த ஏழு இருசக்கர வாகனங்களையும் போலீசார் மீட்டனர்.
இதனை அடுத்து, விலை உயர்ந்த 8 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்த போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு சிறுவர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.