ஓரூர் அருகே கனமழை தற்காலிக பாலம் அடித்துச் சென்றதால் நான்கு கிராமத்திற்கு செல்லும் பாதை துண்டிப்பு, போக்குவரத்து பாதிப்பு, வாழைத்தோட்டங்கள் சேதம்.
ஓரூர் அருகே கனமழை தற்காலிக பாலம் அடித்துச் சென்றதால் நான்கு கிராமத்திற்கு செல்லும் பாதை துண்டிப்பு, போக்குவரத்து பாதிப்பு, வாழைத்தோட்டங்கள் சேதம்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை பகுதிகளில் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் பெய்த கன மழை காரணமாக அப்பகுதியில் உள்ள தற்காலிக தரைபாலம் அடித்துச் சென்றது, இதனால் 4 கிராமத்திற்கு செல்லக்கூடிய போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது, அதேபோல் விவசாயிகள் பயிரிட்டு இருந்த சுமார் 4 ஏக்கர் வாழைத்தோட்டங்கள் முற்றிலும் முறிந்து சேதம் அடைந்துள்ளது.
ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை மற்றும் அந்தேவனப்பள்ளி குந்துக் கோட்டை பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கன மழை பெய்தது, குந்துக் கோட்டை அந்தேவனப் பள்ளி செல்லும் சாலையில் புதியதாக பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது, இதன் காரணமாக அருகில் தற்காலிகமாக சிமெண்ட் குழாய்கள் போட்டு போக்குவரத்து செல்வதற்காக மண்பாதை அமைக்கப்பட்டு இருந்தது, கனமழை காரணமாக மண்பாதை முற்றிலுமாக மலையில் அடித்துச் சென்றது, இதனால் வெங்கடாபுரம் ராமச்சந்திரம் ,அனுமந்தபுரம் கிராம பகுதிகளுக்கு செல்லக்கூடிய அரசு பேருந்து முற்றிலுமாக தடைபட்டதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் அப்பகுதியில் சூறைக்காற்று காரணமாக ஜே ஜி, சக்தி இரு விவசாயிகளுக்கு சொந்தமான சுமார் நான்கு ஏக்கர் வாழை தோட்டங்கள் முற்றிலும் முறிந்து சேதமடைந்து இதனால் அவர்களுக்கு லட்சுக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது தமிழக அரசு இதற்குரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.