கடவுளின் பெயரைச் சொல்லி இலவசமாக அன்னதானம் வழங்குவதாக கூறி அங்கு வருபவ ர்களை தரக்குறைவாக நடத்தும் செங்குட்டை சாரதி!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், கல் புதூரில் ஜெயபாலாஜி திருமண மண்டபத்தில் புரட்டாசி மாதம் முழுவதும் நடைபாதையாக திருப்பதி செல்லும் பாதயாத்திரை குழுவினருக்கு 24 மணி நேரமும் இடைவிடாது உணவு மற்றும் தங்க இடம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இரண்டாவது சனிக்கிழமையான புரட்டாசி மாதம் 27ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் பொதுமக்கள் மற்றும் பாதயாத்திரை வந்த பக்தர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது.
இந்த உணவு வழங்கும் இடத்தில் காட்பாடி செங்குட்டை பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சாரதி திடீரென உள்ளே வந்தார்.

அங்கு உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுவது போல் ஈடுபட்டு அங்கு மதிய உணவு அருந்துபவர்களை சராசரி மனிதர்களாக கூட மதிக்காமல் நாயை விரட்டுவது போல் இங்கே உட்கார், அங்கே உட்கார் என்று அதட்டினார்.
அதைத்தொடர்ந்து உணவு அருந்தி கொண்டிருந்தவர்களில் சிலர் கூடுதலாக சாம்பார், பொரியல், வடை ஆகியவற்றை கேட்டனர். இதற்கு பதில் அளித்த சாரதி நீ என்ன உங்க வீட்டு விருந்துக்கு வந்திருக்கிறாயா?
கொடுப்பதை தின்றுவிட்டு மூடிக்கொண்டு செல் என்று தான்தோன்றித்தனமாகவும், தனது வாயில் வந்த வார்த்தைகளையும் கூறி அங்கு சாப்பிட வந்தவர்களை அசிங்கப்படுத்தியதோடு அவர்களை பலரது மத்தியில் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்டார்.

இந்த ஜெகஜால கில்லாடி சாரதி என்று சொன்னால் அது மிகையாகாது. இது குறித்து அந்த உணவு வழங்கும் அறங்காவலர் குழுவினரிடம் சாப்பிட வந்தவர்களில் ஒருவர் புகார் தெரிவித்தார். புகார் தெரிவித்தும் அந்த அறங்காவலர் குழுவைச் சேர்ந்த நிர்வாகிகள் கண்டும் காணாதது போல் விட்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏதோ பிச்சைக்காரர்களுக்கு இலவசமாக உணவு அளிப்பது போல் நினைத்துக் கொண்டு அவர்களை கால்நடைகளை நடத்துவது போல் நடத்துகின்றனர் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை . இது போன்ற நபர்களை தொடர்பு இல்லாமல் வந்து பரிமாற விட்டுவிட்டு வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல.
வசூல் வேட்டை நடத்திவிட்டு இவர்கள், இவர்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்து பொதுமக்களுக்கு உணவளிப்பது போல நினைத்துக் கொண்டு அவர்களை தங்களது விருப்பத்திற்கு ஆட்டுவிக்கின்றனர்.
இந்த நிலை, இந்த அசாதாரண சூழல் தொடர்ந்து இங்கு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. இதுதான் இப்படி என்றால் மதிய உணவு அருந்த வந்த ஒருவரை மண்டபத்துக்கு வெளியில் அமர்த்தி விட்டு இரண்டு பந்திகள் முடிந்த பின்பும் அவரை உள்ளே அனுப்பாமல் உட்கார வைத்து விட்டனர் என்பது கொடுமையிலும் கொடுமை என்று சொல்ல வேண்டும். அத்துடன் நிற்காமல் அவர் ஐந்து பேர் சாப்பிடுவதை இவர் ஒரே மனிதன் சாப்பிடுவான்.
அவனை அனைவரும் சாப்பிட்டு விட்டு சென்ற பிறகுதான் உள்ளே அனுப்புவேன் என்று பச்சை சட்டை அணிந்து கொண்டிருந்த மனிதாபிமானமற்ற, அரக்க மனம் கொண்ட அந்த அறங்காவலர் குழுவில் உறுப்பினராக இடம் பெற்றிருக்கும் ஒரு நபர் பதிலாக கேள்வி கேட்பவரிடம் விளக்கம் அளிக்கிறார். இப்படி பலரிடம் நன்கொடை பெற்றுக் கொண்டு பொதுமக்களுக்கும், நடைபாதை செல்பவர்களுக்கும் உணவளிக்கிறோம் என்று கூறிக்கொண்டு உள்ளே சர்வாதிகாரிகள் போல நடந்து கொள்கின்றனர் என்பது தான் உண்மையிலும் உண்மை.

ஏதோ சாப்பாட்டிற்கே வழியில்லாமல் வரும் பிச்சைக்காரர்களைப் போல பொதுமக்களையும் வழி நடத்துகின்றனர் இந்த அறங்காவலர் குழுவைச் சேர்ந்தவர்கள். இங்கு நடக்கும் நிகழ்வுகளை நேரில் சென்று பார்வையிட்டால் உண்மை நன்கு விளங்கும். குறிப்பாக செங்குட்டை சாரதி என்பவர் தனக்கு வேண்டிய இளம்பெண்கள், முதிர் கன்னிகள், குடும்ப பெண்கள் ஆகிய பெண் இனத்தை மட்டுமே குறிவைத்து ஆன்மீகம் என்ற பெயரில் மிரட்டி வழி நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாரதி
இவர் வெறும் ஆசாமி என்பது அனைவருக்குமே நன்கு தெரியும். இது உலகறிந்த உண்மை. இப்படி கடவுளின் பெயரைச் சொல்லி விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது என்பதுதான் நிதர்சன உண்மை . இது உண்மையா? இல்லையா? என்பது அந்த திருவேங்கடமுடையானுக்கே வெளிச்சம்.
கோவிந்தா!கோவிந்தா!! கோவிந்தா!!!.
“ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்”
செய்தி ஆசிரியர் ச வாசுதேவன்.
