BREAKING NEWS

கட்டிடப் பொருட்களின் திடீர் விலையேற்றத்தை குறித்து சிவில் இன்ஜினியரிங் அசோசியேசன் பேச்சுவார்த்தை

கிரஷர் ஜல்லி உற்பத்தி சார்ந்த கட்டிடப் பொருட்களின் திடீர் விலையேற்றத்தை
கட்டுப்படுத்தி பழைய விலைக்கு கொடுக்கக் கோருவது தொடர்பாக
ஈரோடு பெருந்துறை ரோட்டில் அமைந்துள்ள சிவில் இன்ஜினியரிங் அசோசியேசன் கட்டிடத்தில் நடந்த கூட்டத்தில் அதன் தலைவர்
செந்தில்குமார் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

டிசல் விலை உயர்வோ. மூலப் பொருட்களின் விலை உயர்வோ எதுவும் இல்லாமல் தங்களது சுயலாப அதிகரிப்புக்காக கூட்டு சேர்ந்து கடந்த ஒருவாரத்தில் கிரஷர் , ஜல்லி உற்பத்தி சார்ந்த கட்டிடப் பொருட்களான M-SAND, P-SAND- மற்றும் ஜல்லி விலையை அபரிமிதமாக விலையை உயர்த்தி உள்ளனர் . திடீர் விலையுயர்வு கட்டுமான பணியை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

இதுவரை ஒரு கட்டிடம் கட்டுவதற்க்கு சதுரடிக்கு விலை ரூபாய் 2,250/- என்ற நிலையில் இருந்தது. தற்போதய ஜல்லி மற்றும் M-SAND ஆகியவற்றின் அபரிமிதமான விலையேற்றத்தின் காரணமாக மட்டுமே ஒரு சதுர அடிக்கு குறைந்த பட்சம் ரூ.250/- விலை உயர்கிறது இதனால் இனி தரமான ஒரு கட்டிடம் கட்டுவது என்றால் ஒரு சதுர அடி கட்டிடத்திற்க்கு ரூபாய் 2500/- க்கு மேல் செலவு ஆகும் என தெரிவித்தார்.

இதன் மூலம் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பொதுமக்களே, மேலும் வீடு கட்டிக் கொண்டிருக்கும் பொதுமக்களின் மீது கூடுதல் பொருள் சுமையையும் கட்டிடம் மேற்கொண்டு கட்டி முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புதியதாக வீடு கட்டும் எண்ணம் கொண்டவர்களின் வீடு கட்டும் கனவு பொய்த்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது போன்ற பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.

 

https://youtu.be/Xqy64QE7bKA

CATEGORIES