BREAKING NEWS

கட்டுமான துறையை புறக்கணித்ததை கண்டித்தும் மயிலாடுதுறையில் கட்டுமான தொழில் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

 

 

 

 

கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த கோரியும், மத்திய அரசின் பட்ஜெட்டில் கட்டுமான துறையை புறக்கணித்ததை கண்டித்தும் மயிலாடுதுறையில் கட்டுமான தொழில் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் :-

 

கட்டுமான பொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி காரணமாக மணல் ஜல்லி சிமெண்ட் கம்பி உள்ளிட்ட பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக மேலும் இந்த பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது. இதனால் கட்டுமான தொழிலை நம்பி உள்ள பொறியாளர்கள் முதல் கொத்தனார் சித்தாள்கள் வேலையாட்கள் மற்றும் இந்த பொருட்களை விற்பனை செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டிடம் கட்டுவது மிகவும் அரிதாகி வரும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான வேலை கிடக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது இந்நிலையில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் கட்டுமான துறைக்கு என்று தனி கவனம் செலுத்தவில்லை இதனை கண்டித்து கட்டுமான தொழில் கூட்டமைப்பு சார்பில் நகராட்சி அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான கட்டிட பொறியாளர்கள் கொத்தனார் உதவியாளர்கள் கட்டிட ஒப்பந்தகாரர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

CATEGORIES
TAGS