கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம்.
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்தகாரர்கள் கூட்டமைப்பு சார்பில் சேலத்தில் நடைபெற்று வரும் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்..
தமிழகத்தில் ஜல்லி, எம்-சாண்ட், பி-சாண்ட் போன்ற கட்டுமான பொருட்களின் விலை கடந்த ஒரு ஆண்டில் 3 முறை உயர்த்தப்பட்டுள்ளதால் அனைத்து ஒப்பந்தகாரர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து சேலம் கோட்டை மைதானத்தில் மாநில அளவிலான உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டமைப்பின் மாநில தலைவர் திருசங்கு தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஒப்பந்ததாரர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழ்நாடு அரசு கட்டுமான பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும், கட்டுமானத்திற்கென தனி ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் எனவும் இந்த போராட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு அரசை வலியுறுத்தினர்.