கம்பம் அருகே மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கல்குவாரிகள் நடத்துவதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காம அக்கவுண்டன்பட்டியில் கடந்த 2012 க்கு முன்பாக ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வந்தது. இந்த கல்குவாரி இயங்கியதன் காரணமாக அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கூலி வேலைக்குச் சென்று பயனடைந்து வந்தனர் இந்த சூழலில் இந்த கல்குவாரிகள் இயங்குவதன் காரணமாக அப்பகுதியில் குவாரிகளை சுற்றி உள்ள விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் மேலும் வனப் பகுதியை ஒட்டி இந்த குவாரிகள் அமைந்துள்ளதால் வனப்பகுதிக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி இந்த குவாரிகள் அனைத்தும் மூடப்பட்டது.
இந்நிலையில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த குவாரிகளை மீண்டும் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பல்வேறு கட்ட ஆர்ப்பாட்டம் போராட்டம் போன்றவை அப்பகுதியில் உள்ள கூலித் தொழிலாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோ சார்பில் நடத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது தேனி மாவட்டம் காமிய கவுண்டன்பட்டியில் மீண்டும் இந்த கல்குவாரிகள் திறப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் துவங்கியுள்ளது.
இதற்காக விண்ணப்பங்கள் ஏராளமாக வந்த போதும் அதில் குறிப்பிட்ட ஆறு மகளிர் குழுவினருக்கு இந்த குவாரிகள் நடத்துவதற்கான அனுமதி கிடைக்கும் சூழலில் உள்ளது.
காமை கவுண்டன்பட்டி பகுதியில் உள்ள சங்கிலிக்கரடு கல்லுடைக்கும் மகளின் நலச்சங்கம் கேகே பட்டி கல் உடைக்கும் மகளிர் சங்கம் அன்னை சத்யா மகளிர் சுய உதவிக் குழு அன்னை தெரசா கல்லூரி மகளின் நல முன்னேற்ற சங்கம் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மகளே சுய உதவிக் குழு சங்கிலி கருப்பன் தண்ணீர் பாறை கல் உடைக்கும் மகளிர் நல சங்கம் உள்ளிட்ட சங்கங்களுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட உள்ளது
இந்த குவாரிகள் திறப்பதற்கான பொதுமக்களின் கருத்துக்களை கேட்பது குறித்து இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோர் இணைந்து தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆர்வி சஜீவனா தலைமை வைக்க தேனி மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் உத்தமபாளையம் வருவாய் காத்த ஆட்சியர் ஆகியோர் முன்னிலை வைக்க மகளிர் சங்கத்தை சார்ந்தவர்கள் விவசாயிகள் கூலித்தொழிலாளர்கள் அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் சுற்றுச்சூழல் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பெரிய திரைகள் வைக்கப்பட்டு இந்த கல்குவாரிகள் செயல்படுவதன் நோக்கம் இந்த குவாரிகள் செயல்பட்டால் அரசுக்கு வரக்கூடிய வருமானங்கள் கூலித் தொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடிய பயன்கள் காமிய கவுண்டன்பட்டி பகுதி எவ்வாறு வளர்ச்சி அடையும் என்பது குறித்தும் இந்த குழுக்கள் மூலமாக பாறைகள் வெட்டி எடுப்பது எவ்வளவு தூரம் குவாரியின் செயல்பாடுகள் என்பது குறித்தும் இந்த குவாரிகள் மூலமாக பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது எனவும் தொழில்நுட்ப ரீதியான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கருத்து கேட்கும் கூட்டம் துவங்கிய போது அந்தப் பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் கூலி தொழிலாளர்கள் மகளிர் சங்க குழுவினர் உள்ளிட்டோர் இந்த குவாரி மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுத்து வரும் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் மேலும் இந்த குவாரியினால் பொதுமக்கள் எவ்வாறு பயனடைவார்கள் என்பது குறித்தும் பேசினார்.
அதனைத் தொடர்ந்து இந்த குவாரிகளைச் சுற்றியுள்ள விவசாயிகள் சில பேசும்போது இந்த குவாரி இதற்கு முன் இயங்கிய போது இந்த குவாரிகளை சுற்றி உள்ள விவசாய நிலங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் அதனால் ஏற்பட்ட நஷ்டங்கள் குறித்தும் சிலர் பேசினார்.
மேலம் பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்படும் போது அருகே உள்ள திராட்சை தோட்டங்களில் பாறை துகள்கள் வந்து விழும்போது விவசாய பொருட்கள் அழிவதாகவும் மேலும் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டங்கள் பாதிக்கப்படுவதாகவும் கிணறுகள் மோட்டார்கள் உள்ளிட்டவை இந்த பாறைகள் வெடிப்பதால் அதிர்வு ஏற்பட்டு சேதம் அடைவதாகவும் விவசாயிகள் எடுத்துரைத்தனர்.
மேலும் விவசாயிகள் கூறுகையில் குவாரிகள் திறப்பதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல அதே நேரத்தில் இப்பகுதியில் உள்ள விவசாயம் பாதிக்கப்படாத வண்ணம் இந்த குவாரிகள் செயல்பட வேண்டும் அவ்வாறு செயல்பட்டால் பிரச்சனை இல்லை என்பது போன்று பேசினார்.
தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கல்குவாரிகள் திறப்பதற்கு நிறைகுறைகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டதாகவும் தொடர்ந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படாத வகையில் இந்த கல்குவாரி திறப்பது சம்பந்தமாக முடிவுகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துச் சென்றனர்.