BREAKING NEWS

கம்பம் கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அழகு குத்தி, அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்.

கம்பம் கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அழகு குத்தி, அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்.

தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள கௌமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

அதன்படி இந்த ஆண்டு திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த மாதம் 16 தேதி சாமி சாட்டுகளுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினசரி பல்வேறு சமூகத்தினர் மண்டகப்படியுடன் திருவிழா நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தல், அங்கபிரதட்சணம் செய்தல், அழகு குத்தி அக்னிசட்டி எடுத்தல், ஆயிரம் கண் பானையெடுத்தல், பால்குடம், காவடி எடுத்தல். உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் தொடர்ச்சியாக பக்தர்கள் செலுத்தி வருகின்றன கௌமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் நடைபெற்றது.

இத் திருவிழாவில் கம்பம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

பொதுமக்கள் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Share this…

CATEGORIES
TAGS