கம்பி வட சேவை பயன்படுத்தி பக்தர்கள் நாள் ஒன்றுக்கு சுமார் 1200 பேர் சாமி தரிசனம்
108 திவ்யதேசங்களில் ஒன்றான ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருள்மிகு ஸ்ரீ யோக நரசிம்மர் திருக்கோவிலில் தமிழக மட்டுமல்லாமல் பிற அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். கம்பி வட சேவை பயன்படுத்தி பக்தர்கள் நாள் ஒன்றுக்கு சுமார் 1200 பேர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வருடாந்திர பராமரிப்பு காரணமாக கம்பிவட ஊர்தி ஆகஸ்ட் (16 .08 .24 )அன்று முதல் (06.09.24 )செப்டம்பர் வரை 22 நாட்கள் கம்பி வட ஊர்தி சேவை இயக்கப்பட மாட்டாது என்பதை திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
CATEGORIES ராணிப்பேட்டை