கருவூர் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பாரதிதாசன் விழா..

கரூர் மாவட்ட வட்டாச்சியர் அலுவலகம் முன் அமைந்துள்ள சங்ககாலப் புலவர்கள் பன்னிருவர் நினைவுத்தூண் முன்பு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இன்று காலை கவிஞர்கள் நாள் விழா கொண்டாடப்பட்டது.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் இணை இயக்குனர் ஜோதி அவர்களும் , தமிழ் அமைப்புகள் சார்பில் திருக்குறள் பேரவைச் செயலாளர் மேலை பழநியப்பனும் வரவேற்புரை ஆற்றினர்.
சமுதாய சீர்கேடு கனவு கவிதைச் சவுக்கால் சுழற்றியவர் பாவேந்தர் பாரதிதாசன் , தமிழ் மொழிச் சிறப்பை அதன் பயன்பாட்டை மக்களிடயே சேர்தத பாட்டுடைப்பூட்டன் பாவேந்தன் என மேலை பழநியப்பன் புகழுரைத்தார் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் சங்க காலப்புலவர்கள் பன்னிருவர் நினைவுத்தூணிற்கு மாலை அணிவித்து பாரத்தாசன் புகழ் போற்றினார் .
தமிழன் குமாரசாமி எசுதர் , கார்த்திகாலட்சுமி தமிழ் அமைப்புகள் சார்பில் சிறப்பு விருந்தினர் வருவாய் அலுவலருக்கு சிறப்புச் செய்தனர்.
வளரும் எழுத்தாளர் மகேசுவரனை மாவட்ட வருவாய் அலுவலர் பாராட்டினார். உடன் முனைவர் கடவூர் மணிமாறன் , முனைவர் அருணா பொன்னுசாமி ,தமிழ்ச் செம்மல் இளவரசி தமிழ்ச் செம்மல் நன்செய் புகழூர் அழகரசன் , லயன் சிந்தன் , லயன் ரவிக்குமார் , லயன் ஜெயா பொன்னுவேல், கவிஞர் திருமூர்த்த , தமிழ் ராஜேந்திரன் கோ.செல்வம் , பொன்னி சண்முகம் டி. சி. மதன், மெடிக்கல் சோமு , கவிஞர் பாஸ்கர் , கவிஞர் யோகாவையாபுரி, சுமதி சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட திரளான தமிழ் அமைப்பினர் ஆர்வலர் பங்கேற்றனர்.