கரூரில்,கோடையின் வெப்பத்தை தணிக்க தேமுதிக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு.
கரூரில்,கோடையின் வெப்பத்தை தணிக்க தேமுதிக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு.தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடையின் தாக்கம் வலுவடைந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசி வருகிறது.
இதனால் குழந்தைகள், வயதில் மூத்தவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.பொதுமக்களின் இந்த சிரமத்தை கருத்தில் கொண்டு, அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் திறந்து விநியோகம் செய்து வருகின்றனர்.
இதன் அடிப்படையில், கரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு, தேமுதிக கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் அரவை முத்து தலைமையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில், புறநகர் மாவட்ட செயலாளர் எஸ் பி சிவம். ராஜேந்திரன், மாநகர மாவட்ட பொருளாளர் அனிதா ஆனந்த், புறநகர் அவைத் தலைவர் பேராசிரியர் ரங்கநாதன், மத்திய நகர செயலாளர் ஆரிப் ராஜா, முன்னாள் மாவட்ட பொருளாளர் கலையரசன் உள்ளிட்ட மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் இளநீர், தர்பூசணி, நீர், மோர் உள்ளிட்ட பானங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.
இந்த பொருட்களை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் இளநீர் மற்றும் தர்பூசணியை சுவைத்தும் ,நீர் மோர் பானங்களை அருந்தியும் தங்கள் தாகத்தையும், வெயிலின் தாக்கத்தையும் தனித்து கொண்டனர்.