BREAKING NEWS

கரூரில், இரவில் பெட்ரோல் போட்டுவிட்டு பணம் தர மறுத்து  மது போதை இளைஞர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்களை அடித்து உதைத்த சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

கரூரில், இரவில் பெட்ரோல் போட்டுவிட்டு பணம் தர மறுத்து  மது போதை இளைஞர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்களை அடித்து உதைத்த சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

கரூரில், இரவில் பெட்ரோல் போட்டுவிட்டு பணம் தர மறுத்து  மது போதை இளைஞர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்களை அடித்து உதைத்த சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரல். படுகாயமடைந்த ஊழியர் ஒருவர் கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கரூர் – கோவை சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் நேற்று இரவு 11.55 மணி அளவில் , இருசக்கர வாகனங்களில் வந்த இளைஞர்கள் சிலர் மது போதையில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பெட்ரோல் நிரப்பும் மையத்தில் பணியாற்றும் சக ஊழியர்கள் சேர்ந்து, பணம் செலுத்தி விட்டு பெட்ரோல் மையத்திலிருந்து வெளியேற வேண்டும் என கூறியதால் ஆத்திரத்தில் பெட்ரோல் நிரப்பும் மையத்தில் பணியாற்றும் ஊழியர்களை மது போதையில் இருந்த கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளனர். அதில் ஊழியர் ஒருவரை அடித்து உதைத்து கீழே தள்ளி கழுத்தில் காலால் மிதிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

தடுக்க முயன்ற மற்றொரு ஊழியரையும் கடுமையாக தாக்கி உள்ளனர்.அந்தத் தாக்குதலில் இரண்டு ஊழியர்கள் காய முற்றனர்.காயமடைந்தவர்களை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் படுகாயம் அடைந்த ஊழியர் ஒருவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் குறித்து பெட்ரோல் நிரப்பும் மையத்தின் உரிமையாளர் ரஞ்சித் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து கரூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூரில், நள்ளிரவில் மது போதையில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு பணம் தர மறுத்து பெட்ரோல் நிரப்பும் ஊழியர்களை சரமாரியாக தாக்கிய வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

CATEGORIES
TAGS