கரூரில் பொதுத் தேர்வு வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு..
கரூர் மாவட்டம் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் 71 வது பொதுக்குழு கூட்டம் கரூர் ஹோட்டலில் உரிமையாளர் அளவில் தலைவர் என் கருப்பசாமி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கரூர் மாநகராட்சி சுகாதார நல அலுவலர் மருத்துவர் லட்சிவர்ணா கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
இக்கூட்டத்தில், கரூர் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் டெல்லி ஸ்வீட்ஸ் எல்.செந்தில் குமார், பொருளாளர் சுமதி ஸ்வீட்ஸ் சிவ சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ மாணவியர்களுக்கு பரிசு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொழிலாளர் நில உதவி ஆணையர்( அமலாக்கம் ) ராமராஜ் பேசுகையில், ஓட்டல் தொழிலாளர்கள் சம்பள விடுமுறை தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சலுகைகளை அனைவருக்கும் கட்டாயம் வழங்க வேண்டும் மாதம் தோறும் முறையாக சம்பளம் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் வங்கி கணக்கு மூலம் அல்லது உரிய ஆவணங்களில் கையொப்பம் பெற்ற சம்பளத் தொகையினை வழங்க வேண்டும் இதனை அரசு அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது,ஹோட்டல்உரிமையாளர்கள் முறையாக பராமரித்து இதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.