கரூரில் மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்பதை வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடைபெற்றது
கரூரில் மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்பதை வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடைபெற்றது – ஆண்கள், பெண்கள், மாணவ, மாணவிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினர் – வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
மரம் வளர்த்து, மழை பெறுவோம் எனும் தலைப்பில் டிரித்தான் எனும் பெயரில் தனியார் அமைப்பு மாரத்தான் போட்டிகளை கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமத்தில் நடத்தியது. காந்திகிராமம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த மாரத்தான் ஆண்களுக்கு 7 கி.மீ தூரமும், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமிகளுக்கு 3 கி.மீ தூரம் ஓடி எல்லை தூரத்தை கடந்து வந்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு நகர காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் கலந்து கொண்டு முதல் 3 இடங்களை பிடித்தவர்கள், டாப் 10 வந்தவர்களுக்கு கோப்பையும், பாராட்டுச் சான்றிதழும், ரொக்கப் பரிசும் வழங்கி பாராட்டப்பட்டது.