BREAKING NEWS

கரூரில், ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், பினாமி ஆட்கள் வைத்து போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து எழுதி வாங்கி கொண்டதாக பாதிக்கப்பட்ட பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையத்தில் புகார்.

கரூரில், ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், பினாமி ஆட்கள் வைத்து போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து எழுதி வாங்கி கொண்டதாக பாதிக்கப்பட்ட பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையத்தில் புகார்.

கரூர் மாவட்டம், வாங்கல் காட்டூரைச் சேர்ந்த என் பெயர் பிரகாஷ் நான், நாமக்கலில் சுமதி & கோ என்ற நிறுவனம் மற்றும் பரமத்தி வேலூரில் சுமதி & கோ மற்றும் சுமதி டிரேடர்ஸ் என்ற பெயரில் எலக்ட்ரிக்கல்ஸ் கடை நடத்தி வருகிறேன்.

எனக்கும் கரூர் மாவட்ட அ.தி.மு.க மாவட்ட கழக செயலாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் ஆகியோருக்கும் இடையே நீண்ட நாள் நட்பு உள்ளது.

மேலும், பல வருடங்களாக பணம் கொடுக்கல் வாங்கல் வரவு செலவு செய்து வந்துள்ளோம்.

எம்.ஆர். விஜயபாஸ்கர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபொழுது அவரது உத்தரவின் பேரில் அவருடைய பினாமிகள் மூலம் எடுக்கப்பட்ட அரசு காண்ட்ராக்ட்களுக்கு எனது எலக்ட்ரிக்கல் கடையில் இருந்து ஏகப்பட்ட பொருட்கள் சப்ளை செய்துள்ளேன்.

மேலும், எம்.ஆர். விஜயபாஸ்கரின் குடும்ப உறுப்பினர்களின் பினாமி நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாயை வங்கி கணக்கிலும், நேரடியாகவும் மற்றும் அவருக்கும் அவரது தம்பி சேகருக்கு நேரடியாக பணமாகவும் 10 கோடி ரூபாய் வட்டிக்கு கடனாக கொடுத்துள்ளேன்.

இதற்கு மாத வட்டி ரூ.15,00,000/- த்தை கடந்த 2023-ம் வருடம் ஜீன் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் தரவில்லை.

எனவே, 2024-ம் வருடம் ஜனவரி மாதத்தில் கொடுத்த பணத்தை வட்டியுடன் சேர்த்து திரும்ப வேண்டுமென்று கரூரில் அவரது வீட்டிற்கு சென்று கேட்டேன்.

அப்போது, எம்.ஆர். விஜயபாஸ்கர் என்னை திட்டி பணம் தரமுடியாது என்று கெட்ட வார்த்தையால் திட்டி அனுப்பினார்.

பின்னர், ஒரு வாரம் கழித்து பிரகாஷை கரூர் உத்தமி பொன்னுச்சாமி திருமண மண்டபம் அருகில் உள்ள அவரது வீட்டிற்கு வரச்சொன்ன எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவருக்கு Looms தறி போட என்னுடைய குன்னம்பட்டி, மற்றும் தோரணக்கல் பட்டியில் உள்ள சுமார் 100 கோடி ரூபாய் மார்க்கெட் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அவர் சொல்லும் நான்கு நபர்களுக்கு எழுதித்தரும்படி மிரட்டினார்.

இதனால், அடியாட்களை வைத்து மிரட்டி சொத்தை எழுதி வாங்க முயற்சி செய்தனர்.

அப்போது, சொத்தை எழுதி கொடுக்காமல் விட மாட்டார்கள் எனவே, எனது மகள் பெயரில் சொத்தை தான செட்டில்மெண்ட் செய்து விடலாம் என
எனது மனைவியின் சகோதரி மகன் பிரவீன் யோசனை கொடுத்தார். இதை நம்பி எனது சொத்தை என மகள் சோபனா பெயரில் மாற்றி கடந்த 08-02-2024 தேதி தானச் செட்டில்மெண்ட் எழுதி வைத்து விட்டேன்.

இதன் பின்னர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவரது தம்பி சேகர் மற்றும் பிரவீனும், கூட்டாக சேர்ந்து எனது மகளுக்கு தான செட்டில் மெண்டாக கொடுத்த சொத்துக்களை அபகரிப்பு செய்ய திட்டமிட்டு, ஆட்களை வைத்து தான செட்டில்மெண்ட் அசல் காப்பி எங்கே என கேட்டு தாக்கினர்.
இதனால், கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் 05- 04-2024ம் தேதியில் சேர்ந்ததாக கூறினார்.

இந்த சமயத்தில் நான் மருத்துவமனையில் இருப்பதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு பிரவீன், எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவருடன் இருக்கும் பலரும் சேர்ந்து எனது மகள் சோபனா மற்றும் மனைவி சசிகலா ஆகியோர்களை மிரட்டி எனது மகள் சோபனாவுக்கு எழுதிக்கொடுத்த சொத்துக்களை சோபனாவிடமிருந்து 06-04-2024 ஆம் தேதி 1. ரகு 2.சித்தார்த்தன் 3. மாரப்பன் 4. செல்வராஜ் ஆகியோர்களின் பெயரில் மோசடியாக ஒரு கிரைய செய்துள்ளனர்.

எனது மகள் சோபனாவுக்கு எழுதிக் கொடுக்கப்பட்ட செட்டில்மெண்ட் அசல் பத்திரம் என் வசம் இருக்கும் நிலையில், அந்த ஆவணங்கள் தொலைந்து விட்டதாகவும் அந்த ஆவணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லி வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் இருந்து கொடுக்கப்பட்டதாக பொய்யான Not Traceable Certificate யை கரூர், மேலக்கஞர் சார்பதிவாளர் வசம் கொடுத்து (ஆவண எண்.P/38/2024) Pending பத்திரம் 10-05-2024 அன்று Regular பத்திரமாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

இதை அறிந்த உடன் 11-05-2024 -ம் தேதியன்று கரூர், மேலக்கருர் சார்பதிவாளர் அலுவலகத்தில் அசல் ஆவணங்கள் தன்னிடம் உள்ளது போலியான Not Traceable Certificate யை கொடுத்து பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து அசல் ஆவணங்களை கிரையம் பெற்ற நபர்களிடம் ஒப்படைக்க கூடாது என்று சொல்லி மனு கொடுத்தேன்.

இந்த நிலையில், எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் மற்றும் பலர் அரசியல் பலம் மற்றும் பணபலம் படைத்தவர்களாக இருந்ததால் பயத்தில் நான் இதுவரை புகார் அளிக்காமல் தற்சமயம் புகார் அளிப்பதாக கூறினார்.

தனது உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து நேரிடலாம்
என்பதை தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும், சம்மந்தப்பட்ட நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து தன்னையும், தனது குடும்பத்தாரையும்
ஏமாற்றி சுமார் 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மோசடியாக நில அபகரிப்பு செய்து கொண்ட சொத்தை மீட்டு தந்து எனக்கு தக்க பாதுகாப்பு வழங்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார்.

CATEGORIES
TAGS