கரூரில் 2000 ஆண்டுகள் பழமையான வெண்ணைமலை ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.
தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயில் மற்றும் கரூர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வளாகங்களில் அமைந்துள்ள சித்தர் ஸ்ரீ கருவூரார் சன்னதி மூன்றாவதாக அமைந்துள்ள ஒரே கோவில் கரூர், வெண்ணமலை ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகும்.
2000 ஆண்டுகள் பழமையான ஆலயங்களில் ஒன்றான கரூர் வெண்ணைமலை ஸ்ரீ பாலசுப்பிரமணிய
கோவிலின் கும்பாபிஷேகம் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. முக்கிய நிகழ்வாக கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷே விழாவை முன்னிட்டு ஆலயம் அருகே பிரம்மாண்டமாக பிரத்யேக யாக குண்டங்கள் அமைத்து நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்றது.
யாக கலசத்திற்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்ட பிறகு சிவாச்சாரியார் கலசத்தினை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்த பிறகு, கோபுர கலசத்தை வந்தடைந்தனர். பின்னர் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
பின்னர் கலசத்திற்கு தூப தீபம் காண்பிக்கப்பட்ட பிறகு பொதுமக்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவை காண கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏராளமான தொண்டு நிறுவனங்கள் சார்பில் ஆங்காங்கே அன்னதானம் மற்றும் நீர் மோர் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பிற்காக நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.