BREAKING NEWS

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருமண மண்டபங்கள், உணவகங்கள்;, தங்கும் விடுதிகள், அடகுக்கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்;
தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான மீ.தங்கவேல்,  தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும்; அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது:
கரூர் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்குப்பதிவு குறித்த தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் முடியும் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்.  திருமண மண்டபங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், ஆகிய அனைத்திலும் தங்குவோர் விவரங்கள் சரியான பெயர் முகவரி அலைபேசி எண்ணுடன் தவறாமல் பதிவேட்டில் பதியப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு நபரும் தங்கள் வருகையின் நோக்கம் பற்றி தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.உள்ளுர் நபர்கள் அறைகளை பதிவு செய்தால் யாருக்காக பதிவு செய்யப்படுகிறது என்ற விவரத்தினையும், தங்குவோர்கள் பற்றிய விவரங்களையும், அவர்களது வருகைக்கான காரணத்தையும் அறிந்து,அதனை பதிவேட்டில் பதிய வேண்டும்.  அவர்களது விபரங்களை தொடர்ந்து காவல் துறையினரிடம் தெரிவிக்க வேண்டும்.  உள்ளுர் நபர்கள் தங்கும்போது அவர்களிடம் சந்தேகத்திற்கு இடமாக சூட்கேஸ் அல்லது பணப்பைகள் இருக்குமானால், அதுபற்றி தகவல்களை 04324-255016, 255017, 255018, 255019, 255020 மற்றும் 1800-425-5016 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ, தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் மற்றும் பறக்கும்படை குழுவிடமும்; தெரிவிக்க வேண்டும்.
திருமண மண்டபம், சமுதாய கூடங்கள் அல்லது பிற பெரிய மண்டபங்களில் பரிசுப்பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் விநியோகிக்க கூடாது.தேர்தல் காலங்களில் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் என்ன காரணங்களுக்காக பதிவு செய்யப்படுகிறது என்பதற்கு சரியான ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்.
 அன்னதானம் என்ற பெயரில் பெரிய அளவில் உணவு விநியோகம் வழிபாட்டு தளங்களைத் தவிர பிற இடங்களில் நடைபெறுமானால் தேர்தலுக்கு முன்னர் வாக்காளர்களை தன் பக்கம் ஈர்ப்பதற்காக உணவு வழங்குவதற்கான சந்தேகத்தை தோற்றுவிக்கும்.
 பணம் பட்டுவாடா செய்தல் போன்ற நிகழ்வுகள் தெரிய வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
அவ்வாறான முறைகேடான குற்றமிழைத்தவர் மீதும் உரிய வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இப்பொருள் தொடர்பாக சட்டவிதிமுறைகளுக்கும், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலுக்கும் முரண்பாடாக செயல்படும் அரசியல்வாதிகள், வேட்பாளர்கள் மற்றும் இதரர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் இதன் மூலம் எச்சரித்துள்ளது.
எனவே கரூர் மாவட்டத்தில் மக்களவை பொதுத் தேர்தல் அமைதியான முறையில் நடத்திட அனைவரும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ..தங்கவேல்,, கேட்டுக்கொண்டார்.
உடன், உதவி தேர்தல் அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும்  திருமண மண்டபங்கள், உணவகங்கள்;, தங்கும் விடுதிகள், அடகுக்கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS