கரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு குறை தீர்ப்பு ஜமபந்தி முகாமில், தொலைபேசிகளில் பேஸ்புக், வீடியோ பார்த்துக்கொண்டு இருந்த அரசு துறை அதிகாரிகள்.
கரூர் மாவட்டத்தில் இன்று முதல் நான்கு நாட்கள் ஜமாபந்தி ( சிறப்பு மக்கள் குறைதீர்க்கும முகாம்) நடைபெறுகிறது.
இன்று முதல் நாள் முகாமில் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் ஜமாபந்தி முகாம், கட்டளை குறு வட்டத்தில் உள்ள பாலராஜபுரம், ரெங்கநாதபுரம் வடக்கு, மற்றும் தெற்கு, மாயனூர், மணவாசி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்களது குறைகள் சார்ந்த மனுக்களை அழித்து உடனடி தீர்வு காணும் ஜமாபந்தி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி குறைகளை கேட்டுக் கொண்டிருந்தார்.
இதில் கலந்து கொண்ட அரசுத்துறை அதிகாரிகள் மனுக்கள் குறைகளை தீர்ப்பதை கவனிக்காமல் தொலைபேசிகளில் பேஸ்புக், வாட்ஸ் அப் வீடியோ பார்த்துக் கொண்டு இருந்தனர்.
மனுக்கள் கொடுக்க வந்த பொதுமக்கள் முகம் சுளித்தவாறு சென்றனர்.