BREAKING NEWS

கரூர் மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

கரூர் மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

கரூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக உள்ள நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று கரூர் மாவட்ட திமுக சார்பில் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் பஸ் நிலையம் அருகே உள்ள கோவை ரோட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது .

இதில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் மற்றும் மாநகர செயலாளர் கோல்ட் ஸ்பாட் ராஜா வழக்கறிஞர் சுப்பிரமணி ஜோதி பாஸ் வி.ஜி குமார் உட்பட காட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு.

அங்கு வைக்கப்பட்டிருந்த இளநீர் ,தர்பூசணி ,மோர் ,உள்ளிட்ட உடலுக்கு குளிர்ச்சியூட்டும் பொருட்களை பொது மக்களுக்கு வழங்கி சிறப்பித்தனர்.

Share this…

CATEGORIES
TAGS