கலவையில் முருகன் கோவிலில் சிசிடிவி கேமராக்கள் உடைத்து மூன்று வெள்ளி கிரீடம், வேல் கொள்ளை.
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை பேருராட்சிக்கு உட்பட்ட கலவை – சென்னசமுத்திரம் சாலையில் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணி கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இத்திருத்தளத்தில் அமாவாசை கிருத்திகை உட்பட பல்வேறு விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம் இந்நிலையில் நேற்று மாலை கோவில் பூசாரி வழக்கம் போல் பூஜைகள் முடித்துவிட்டு பின் கோவிலை பூட்டி சென்றுள்ளார்.
இன்று கிருத்திகை என்பதால் அதிகாலை கோவிலை திறந்து உள்ளே சென்று பார்க்கும் பொழுது கோவிலின் கருவறை கேட் மற்றும் கதவு உட்பட 4 பூட்டுகள் கோவில் உள்ளே இருந்த 4 நான்கு சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்பட்டு கோவில் கருவறையில் இருந்த மூன்று வெள்ளி கிரீடம், மற்றும் வேல் திருடப்பட்டு உண்டியல் உடைக்கபட்டு கொள்ளையடிக்கப்பட்டத்தை பார்த்து பூசாரி அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக கோவில் நிர்வாகத்திற்கு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார் அதனை தொடர்ந்து விரைந்து வந்த கலவை காவல் நிலைய ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார் நேரில் சென்று சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை எடுக்க உள்ளதாக போலிசார் தெரிவித்தனர்.
மர்ம நபர்கள் கோவிலின் பின்புறம் தடுப்பு சுவர் இல்லாத்தை அறிந்து கன கட்சதமாக இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்..