கலவை அருகே பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சோமநாதீஸ்வரருக்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது..
கலவை அருகே பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சோமநாதீஸ்வரருக்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது..
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள வெள்ளம்பி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சிவகாமி சுந்தரி உடனுறை ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்தரம் முன்னிட்டு திருகல்யாணம் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக கோதண்டராம கோவிலில் இருந்து மஞ்சள், குங்குமம், வலையல் உள்ளிட்ட பல்வேறு பழ வகைகள் அடங்கிய சீர் வரிசையினை மங்கல வாத்தியம் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்து பெண்கள் அரசங்கால் நடப்பட்டு பெண் வீட்டார் – மாப்பிள்ளை வீட்டார் ஒப்பந்த தாம்பூலம் மாற்றி கொண்டனர். தொடர்ந்து யாகம் வளர்க்கப்பட்டு பல்வேறு மந்திரங்கள் வேத பண்டிதர்களால் ஓதப்பட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மங்கல முழங்கு நடனத்துடன் சுவாமிக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த திருக்கல்யாண நிகழ்வில், ஏராளமான பெண்கள் குழந்தை வர வேண்டிய திருமணம் ஆகாத பெண்கள் திருமணம் விரைவில் நடைபெற வேண்டிக் கொண்டனர். ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..