BREAKING NEWS

கல்லங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ளது கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் திருவிழா

கல்லங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ளது கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் திருவிழா

கல்லங்குறிச்சி கிராமத்தில் அமைத்துள்ள கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் ஏகாந்தசேவை

அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ளது கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோவில்.

ஏழைகளின் திருப்பதி என்று அழைக்கபடும் இந்த திருக்கோவிலின் திருவிழா கடந்த 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் நிறைவு நாள் திருவிழாவான ஏகாந்தசேவை நேற்று இரவு தொடங்கி விடிய, விடிய நடைப்பெற்றது. இந்நிலையில் சனிக்கிழமை விடியற்காலை 03 மணியளவில் அலங்கரிக்கபட்ட கலியுக வரதராஜ பெருமாள் மற்றும் ஶ்ரீதேவி, பூதேவி உள்ளிட்ட தெய்வங்கள் தசாவதார மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். மேலும் திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டம் முடிந்து கலியுக வரதராஜ பெருமாள் மிகவும் சந்தோஷமான நிலையில், அதாவது ஏகாந்தமாக இருப்பார் என்றும், வேண்டும் வரங்களை தருவார் என்பதால் பல்லாயிரகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனையொட்டி மாவட்ட எஸ்பி செல்வராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தது குறிப்பிடதக்கது.
செய்தியாளர் வேல்முருகன்.

Share this…

CATEGORIES
TAGS