BREAKING NEWS

கல்வி

என்ஜினியரிங் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு தேதிகள் வெளியீடு!! அண்ணாப் பல்கலைக் கழகம் அதிரடி!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கல்லூரிகளில் வகுப்புக்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்தன. தற்போது கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கிய நிலையில் கல்லூரிகளில் நேரடி வகுப்புக்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு, கல்லூரி திறப்பு பற்றி அண்ணா பல்கலைக்கழகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் அண்ணா பல்கலை இணைப்பு கல்லூரிகளில் படிக்கும் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு செமஸ்டருக்கான தேதி மற்றும் அடுத்த ஆண்டு கல்லூரி திறப்பு ஆகியவை குறித்த தகவல்கள் வெளியிட்டுள்ளன. மார்ச் 16 முதல் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும்.

அடுத்த செமஸ்டருக்கான பாடத்திட்ட பகுதிகள் ஜூன் 16 வரை நடத்தப்படும் அவர்களுக்கான செய்முறை தேர்வு ஜூன் 18ம் தேதி நடைபெறும். இறுதி செமஸ்டருக்கான தேர்வு ஜூன் 28ம் தேதி வரை நடைபெறும். அதன்பிறகு கல்லூரிகளில் கோடை விடுமுறை விடப்படும். அடுத்த கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் ஆகஸ்ட் 10 முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என அண்ணா பல்கலை கழகம் தெரிவித்துள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )