BREAKING NEWS

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் சங்கராபுரத்தில் நடிகை குஷ்பு உருவ பொம்மை எரிப்பு.

மகளிர் உரிமைத்தொகை வழங்குவதை இழிவாக பேசிய சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்புவை கண்டித்து கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் மாநில மகளிரணி துனை செயலாளரும் முன்னாள் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அங்கையற்கண்ணி மற்றும்
மாவட்ட மகளிரணி செயலாளர் கலா,சங்கராபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜாரமணி,திலகவதி,அம்பிகா,பரிதா ஆரோக்கியம் ஆகியோர்கள் தலைமையில் சங்கராபுரம் தபால் நிலையம் முன்பு ஒப்பாரி வைத்தும்,நடிகை குஷ்பூ உருவ பொம்யை எரித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு நடிகை குஷ்புவுக்கு எதிராக குஷ்பூ ஒழிக குஷ்பு ஒழிக என பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பிவாறு தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தனர்,இந்த நிகழ்வில் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் கலந்து கொண்டார்,பாதுகாப்பு பணியில் சங்கராபுரம் காவல் துறையினர் ஈடுபட்டனர்.

CATEGORIES
TAGS