கள்ளிப்பட்டியில் பைக்கில் கஞ்சா கடத்திய இருவர் கைது 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டியில் பைக்கில் கஞ்சா கடத்திய இருவர் கைது செய்யப்பட்டு 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பங்களாபுதூர் கள்ளிப்பட்டியில், கோபி மதுவிலக்கு காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பைக் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது, பைக்கில் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு செல்லப்படுவது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு சென்ற கோபி பச்சமலையை சேர்ந்த ஆறுமுகம், கள்ளிப்பட்டியை சேர்ந்த கனகராஜ், ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து உதவி காவல் ஆய்வாளர் கருப்புசாமி சிவக்குமார். மாரிமுத்து காசிலிங்கம் சங்கர் கணேஷ் ஆய்வாளர் கலையரசி அவர்கள் கைது செய்து இருவரும் கோபியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.