BREAKING NEWS

காங்கிரஸ் சார்பாக கூடலூரில் மனித வன விலங்குகள் மோதலை கட்டுப்படுத்த வேண்டுமென உண்ணாவிரத போராட்டம்

காங்கிரஸ் சார்பாக கூடலூரில் மனித வன விலங்குகள் மோதலை         கட்டுப்படுத்த வேண்டுமென உண்ணாவிரத போராட்டம்

காங்கிரஸ் சார்பாக கூடலூரில் மனித வன விலங்குகள் மோதலை கட்டுப்படுத்த வேண்டுமென இன்று உண்ணாவிரத போராட்டம் அறிவித்த காங்கிரசார் போராட்டத்தை கைவிடுவதாக அறிவிப்பு…

வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்கும் வகையில் அகழிகள் மற்றும் மின்சார வேலைகள் அமைக்கப்படும் என நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் வாபஸ்…

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மழை பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த ஆய்வினை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த இரண்டு நாட்களாக பார்வையிட்டு ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து இன்று தமிழகம் மாளிகையில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தென்மேற்கு பருவமழை பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து
அரசுக்கு அறிக்கை அனுப்பும் வகையில் இன்று நெடுஞ்சாலைத்துறை,
வேளாண்மைத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும்
தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மேலும் நீலகிரி மாவட்டத்தில் அபாயகரமான மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்தார்.

CATEGORIES
TAGS