காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தால் விவசாயிகள் கவலை

செய்தியாளர் கொ விஜய்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே 55 சதுர கி.மீ., சுற்றளவில், 6,112 ஏக்கர் பரப்பளவில் தமிழக அரசிற்கு சொந்தமான வனப்பகுதி உள்ளது. வேப்பூர் கூட்டுரோடு வழியாக வடபுறம், பெரியநெசலூர், அடரி, அரசங்குடி, கிருஷ்ணாபுரம் வழியாக விருத்தாசலம் – சேலம் மாநில நெடுஞ்சாலை வரை வனப்பகுதி உள்ளது.
இப்பகுதியில் ஆயிரக்கணக்கான மயில்கள், மான்கள், குரங்குகள், காட்டுப் பன்றிகள், நரிகள், எறும்பு தின்னிகள், உட்பட பல வகையான வன விலங்குகள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வருகிறது.
பெரியநெசலூர் பகுதிகளில் உள்ள வன விலங்குகள் தண்ணீர், உணவு தேடி விருத்தாசலம்-சேலம் சாலையை கடந்து விவசாய விலை நிலங்களில் புகுந்து வேளாண் விலைப் பயிர்களை நாசம் செய்துவிட்டு செல்வதோடு, குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
எனவே விவசாய விளைநிலங்களை நோக்கி படையெடுக்கும் வன விலங்குகளால் விவசாய பயிர்களை சேதமடையாமல் காக்கவும், வனப்பகுதியை சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்கவும்,
வன விலங்குகளின் தாகத்தைத் தீர்க்க தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பவும், தடுப்பணை கட்டியுள்ள இடத்தை மழைக் காலத்திற்குள் தூர் வாரி, அகலப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள், விலங்குகள் நல ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.