BREAKING NEWS

காட்டுப்பன்றி மான் உள்ளிட்ட வனவிலங்குகளால் விவசாயம் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்

காட்டுப்பன்றி மான் உள்ளிட்ட வனவிலங்குகளால் விவசாயம்  பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்

காட்டுப்பன்றி மான் உள்ளிட்ட வனவிலங்குகளால் விவசாயம் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்த கோரி- கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் ராகவன் தலைமையில் விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்

இப்போராட்டத்தின் போது
விவசாய விளை நிலங்களில், பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள் நடமாட்டத்தை தடுக்க கேரள மாநிலத்தை போல் வாய் வெடி மருந்து வைத்து மேற்கொள்வதற்கு உரிய ஆணை பிறப்பிக்க கோரியும்,

வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கும் உயிர் சேதத்திற்கும் முழு இழப்பீடு தொகை வழங்க வேண்டும்

பன்றிகளின் நடமாட்டத்தை தடுக்க தவறிய வனத்துறையினரையும் கண்டித்தும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது போராட்டத்தில் எட்டயபுரம் விளாத்திகுளம், கயத்தார், புதூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி கோட்டாட்சியரை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை வழங்கினார் மனைவியின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Share this…

CATEGORIES
TAGS