காட்டுப்புத்தூரில் ஜெயலலிதா 76 -வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர்கள் பரஞ்ஜோதி, சிவபதி பங்கேற்பு.
திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்றத் தொகுதி காட்டுப்புத்தூர் பேரூர் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 -வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் காட்டுப்புத்தூர் எம்.ஜி.ஆர் திடல் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு காட்டுப்புத்தூர் நகரச் செயலாளர், தலைமை வகித்தார். அனைவரையும் தொட்டியம் மேற்கு ஒன்றிய செயலாளர் வரவேற்றார் மாவட்ட கவுன்சிலர்,
இளைஞரணி பொருளாளர் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புகழையும், திமுக அரசு விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும், செய்த துரோகச் செயலை விரிவாக எடுத்து கூறினர்.
CATEGORIES திருச்சி