காட்டுப்புத்தூர் காந்திநகர் அருள்மிகு ஸ்ரீ அத்தனூர் அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா.
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் காந்திநகர் அருள்மிகு ஸ்ரீ அத்தனூர் அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் முன்னிட்டு பக்தர்கள் தீர்த்த குடம் முளைப்பாரி எடுத்து வழிபடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காட்டுப்புத்தூர் காந்திநகர் பகுதியில் உள்ள ஸ்ரீ அத்தனூர் அம்மன் திருக்கோயிலின் குடமுழுக்கு விழா மார்ச் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நடுதல், காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வருதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றதை தொடர்ந்து யாகசாலையில் முளைப்பாரி வைத்து வழிபடும் நிகழ்ச்சிக்காக அப்பகுதி பொதுமக்கள் தங்களது வீடுகளில் தட்டுகளில் சிறு தானியங்கள் விதை போட்டு முளைக்க வைத்திருந்த முளைப்பாரி வைத்து கும்மி அடித்து தட்டுகளை தலையில் சுமந்து மேல தாளங்கள் முழங்க காட்டுப்புத்தூர் நகரில் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று கோயிலில் உள்ள யாகசாலையில் வைத்து வழிபட்டனர்.
இதனைத் தொடர்ந்து யாகசாலையில் சிறப்பு யாக வேள்விகள் நடைபெற்றது. இவ் விழாவில் பங்கேற்றிருந்த அணைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் மற்றும் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.