BREAKING NEWS

காட்பாடியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா!!

காட்பாடியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா!!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, காந்திநகர், காட்பாடி தெற்குப் பகுதி அதிமுக சார்பில் குடிநீர், மோர், தர்பூசணி, இளநீர், குளிர் பானங்கள் மற்றும் பழங்கள் ஆகியவையடங்கிய தண்ணீர் பந்தல் திறப்பு விழா காட்பாடி தெற்கு பகுதி செயலாளர் பேரவை ஏ.இரவி தலைமையில் வட்டக் கழக செயலாளர்கள் சுரேஷ்பாபு, பாஸ்கர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த தண்ணீர் பந்தல் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பகுதி கழகச் செயலாளரகள் ஜனார்த்தனன், நாராயணன், குப்புசாமி, மாநகர் மாவட்ட பேரவை செயலாளர் அமர்நாத், மாவட்ட பேரவை இணைச் செயலாளர் சி.பாலாஜி, சுகேந்திரன், பூபாலன், வட்ட கழக செயலாளர்கள் ந.எழிலரசன், வெங்கடேசன், மாதவன், பாலச்சந்தர், செல்வம், அனந்தராமன், சேகர், ஜோதி மற்றும் அதிமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS