காட்பாடியில் இரு வெவ்வேறு திருட்டு வழக்கில் ஈடுபட்ட இருவர் கைது போலீசார் நடவடிக்கை
வேலூர் மாவட்டம் காட்பாடி காட்பாடி எல்.ஜி புதூர் சாலை கெங்கையம்மன் தெருவை சேர்ந்த கோவிந்தசாமி மனைவி புஷ்பா (65 ) என்பவர் குடியாத்தம் சாலையில் பேருந்துக்காக இன்று காத்திருந்தபோது அங்கிருந்த ஒரு நபர் புஷ்பாவிடம் பேச்சு கொடுத்துள்ளார்
பின்னர் புஷ்பா வீட்டிற்கு சென்று பார்க்கும் பொழுது அவரது மணிபர்ஸ் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அருகில் உள்ள காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காட்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர் இந்த நிலையில் இன்று காட்பாடி அடுத்த கிளித்தான்பட்டறை பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் சந்தேகம் அளிக்கும்படி நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார் இதனை அடுத்து அவரிடம் போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் புஷ்பாவின் மணிபர்ஸ் திருடி சென்றதும் இவர் லத்தேரி அன்னங்குடி விழுந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பதும் தெரிய வந்தது இதனை அடுத்து போலீசார் ஆறுமுகத்தை கைது செய்தனர்
இதேபோல் காட்பாடி செங்குட்டை, சித்தவைத்தியசாலை,
பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் பல் மருத்துமணை நடத்தி வருகிறார் அவரது வீட்டில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் அருகிலுள்ள காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் காட்பாடி கிறிஸ்டியன் பேட்டை சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர் அப்போது அந்த இளைஞர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார் இதனை அடுத்து அந்த நபரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில் அவர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஆசனம்பட்டு ரோடு பகுதியைச் சேர்ந்த சையத் அலி (19) என்பதும் ரவிக்குமார் வீட்டில் இருசக்கர வாகனம் திருடியதும் தெரிய வந்தது சையத் அலியை கைது செய்தனர்
கைது செய்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆச்சரியப்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்