BREAKING NEWS

காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 91% தேர்ச்சி!

காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 91% தேர்ச்சி!

வேலூர் மாவட்டம், காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 91 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் மொத்தம் 227 மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 205 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

இது 91 சதவீத தேர்ச்சியாகும். இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், கணிதம், புள்ளியியல் ஆகிய 9 பாடங்களில் அனைத்து மாணவிகளும் தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சியடைந்துள்ளனர். பள்ளியில் வாடகை ஆட்டோ ஓட்டுநரின் மகள் ஏ .தர்ஷினி 600க்கு 580 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இவர் வணிகவியல், பொருளியல், கணினி பயன்பாடுகள் ஆகிய மூன்று பாடத்தில் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார். தையல் வேலை செய்யும் குணசேகரின் மகள் ஜி. ரேகா 600க்கு 577 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இந்த மாணவிகள் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் கொடுத்த ஊக்கத்தின் காரணமாக அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

பள்ளிக்கு வருகை தந்த மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியை கோ. சரளா, ஆசிரியர்கள் வெங்கடேசன், நிவேதிதா, சங்கீதா, ஸ்ரீமதி, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தாமஸ் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்தி இனிப்புகள் வழங்கினர்.

CATEGORIES
TAGS