காட்பாடி அருகே திரௌபதி அம்மன் திருக்கல்யாண வைபோகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை கோட்டநத்தம் பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா சித்திரை 15 ஆம் நாளான கடந்த 28.04.2024 அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது அதனைத் தொடர்ந்து சித்திரை 20 ஆம் நாளான கடந்த 03.05.2024 மகாபாரத கொடியேற்றுதல் வைபவம் நடைபெற்றது மேலும் அனுமன் கொடியேற்றம், பாரத கொடியேற்றம், பக்காசூரன் வதை, ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக இன்று திரௌபதி அம்மன் திருக்கல்யாண வைபவ நிகழ்வு விமர்சையாக நடைபெற்றது இதில் வேத மந்திரங்கள் முழங்க சுபத்திரை திருமணம் நடைபெற்றது.
இதில் அக்கிராம மக்கள் மட்டுமல்லாது வள்ளி மலையை சுற்றிலும் உள்ள உள்ள திருக்கல்யாண வைபோகத்தில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.