காட்பாடி அருகே மாநில எல்லை சோதனை சாவடியில் கண்காணிப்பு குழு அதிகாரிகள் நடவடிக்கை

காட்பாடி அருகே மாநில எல்லை சோதனை சாவடியில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்து நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் நடவடிக்கை
2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்
அந்தவகையில் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்டியன் பேட்டை மாநில எல்லை சோதனை சாவடியில்
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி தலைமையிலான நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்பொழுது
அப்பொழுது சித்தூரில் இருந்து வேலூர் நோக்கி வந்த சென்னை ராஜேஸ்வர் டிரேடிங் கம்பெனியை சேர்ந்த நர்பத், ரமேஷ் சவுத்ரி ஆகியோரிடம் சோதனை மேற்கொண்டபோது அவர்களிடம் இருந்து (கலெக்க்ஷன் பணம் ) உரிய ஆவணம் இன்றி ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 400 ரூபாய் இருந்தது
இதனை அடுத்து புரிய ஆவணம் என்று கொண்டுவரப்பட்ட 1,11,400 ரூபாயை பறிமுதல் செய்து காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சார் கருவூலத்தில் ஒப்படைத்தனர்