காட்பாடி இந்திரா நர்சிங் ஹோம் மருத்துவமனையில் அப்போலோ டயக்னஸ்டிக் மையம் தொடக்க விழா!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, திருநகர், காட்பாடி காந்தி நகர், கடலூர்- சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்திரா நர்சிங் ஹோம் மருத்துவமனையில் டாக்டர் சங்கர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
இம்மருத்துவமனையில் இந்திரா பன்னோக்கு மருத்துவமனையில் அப்போலோ டயக்னஸ்டிக் மைய தொடக்க விழாவில் அப்போலோ மருத்துவமனையில் தலைமை நிர்வாக அலுவலர் நவீன் மற்றும் இந்திரா நர்சிங் பன்னோக்கு மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர்.சங்கர் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் தற்போது பொதுமக்களுக்கு 24 மணிநேரம் சேவையாற்றும் வகையில் அனைத்து வசதிகளையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கி கூறப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பலனடையுமாறு டாக்டர் சங்கர் கேட்டு கொண்டார்.
