காட்பாடி காந்திநகர் வழியாக அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்படாத அவலம்: பயணிகள் கடும் பாதிப்பு
வேலூர் மாவட்டம், காட்பாடி காந்திநகர் வழியாக அரசு நகரப் பேருந்துகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இயக்கப்படாமல் உள்ளது. இதனால் பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது காட்பாடி காந்தி நகர் பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து முடிந்தன.
சாலை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஆகியும் காட்பாடியில் இருந்து பாகாயம் செல்லும் அரசு நகரப் பேருந்துகள் மற்றும் தனியார் நகரப் பேருந்துகள் அதேபோன்று பாகாயம் பகுதியில் இருந்து புறப்பட்டு காட்பாடிக்கு வரும் அரசு நகர பேருந்துகள் மற்றும் தனியார் நகர பேருந்துகள் யாவும் காந்தி நகர் பகுதியில் வந்து செல்லாமல் நேரடியாக சித்தூர் -கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வண்ணமாக உள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து வேலூர் ரங்காபுரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் பயணிகள் சார்பில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் பொதுமக்கள் புகாரை துச்சமென நினைத்து காற்றிலே பறக்க விட்டு விட்டு மண்டல மேலாளர் முதல் கிளை மேலாளர்கள் மற்றும் நேரக்காப்பாளர்கள் என அனைவரும் அலட்சியப் போக்குடனும் தெனாவெட்டுடனும் செயல்பட்டு கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பகல் வேளையில் வெயில் சுட்டெரிக்கும் நிலை இருக்கிறது. இரவு வேளையில் நடந்து செல்லும் நிலைக்கும் பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காந்திநகர் பகுதியில் உள்ளவர்கள் மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வருபவர்களும் ஓடை பிள்ளையார் கோயில் அருகிலேயும், விருதம்பட்டு அருகிலேயும் வந்து பேருந்து ஏறிச் செல்ல வேண்டிய பரிதாபம நிலை பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநர் மற்றும் இந்த அரசு பேருந்துகளை இயக்குதல் மற்றும் பராமரிப்பு பிரிவில் அதிகாரிகள் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பொதுமக்களின் நலன் கருதி மீண்டும் காந்திநகர் வழியாக அரசு மற்றும் தனியார் நகர பேருந்துகளை இயக்க வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் நலன் கருதி வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேருந்துகள் மக்கள் நலனுக்காக இயக்கப்படுகிறதா அல்லது அவரவர்கள் விருப்பத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுகிறதா? என்பதற்கு விடை காண வேண்டும் என்பதே பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. சேவை என்ற நோக்கில் பர்மிட் வாங்கிக் கொண்டு பேருந்துகளை இயக்கும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் அரசு பேருந்து மேலாண் இயக்குநர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு உதவும் வகையில் பேருந்துகளை முறையான வழித்தடத்தில் மீண்டும் இயக்க உத்தரவிட வேண்டும் என்பதே அனைவரது ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .மீண்டும் காட்பாடி காந்தி நகர் வழியாக பேருந்துகள் இயக்கப்படுவது எப்போது? என்பது விடை தெரியாத கேள்வியாக உள்ளது.