BREAKING NEWS

காட்பாடி காவல் நிலையத்துக்கு சிறந்த காவல் நிலையத்துக்கான விருது வழங்கி கௌரவிப்பு! 


தமிழகத்தில் சிறந்த 10 காவல் நிலையங்களை தேர்வு செய்து முதலமைச்சரின் பரிசு வழங்கி கௌரவிக்க சிபாரிசு செய்யப்பட்டது. இதையடுத்து முதல்வர் 10 காவல் நிலையங்களை தேர்வு செய்து அந்த காவல் நிலையங்களுக்கு சிறந்த காவல் நிலையங்களுக்கான விருதுகளை வழங்கி கௌரவிக்குமாறு தமிழக காவல்துறை தலைவர் (டிஜிபி) சங்கர் ஜூவாலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து டிஜிபி சங்கர் ஜூவால் அந்த 10 காவல் நிலையங்களுக்கும் சிறந்த காவல் நிலையங்களுக்கான விருதுகளை (அதாவது கேடயங்களை) வழங்கி பாராட்டு தெரிவித்தார். அத்துடன் அந்த காவல் நிலைய ஆய்வாளர்களையும், அங்கு பணிபுரியும் சக காவலர்களையும் அவர் கௌரவித்தார். அப்படி தேர்வு செய்யப்பட்ட 10 காவல் நிலையங்களில் காட்பாடி காவல் நிலையமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022- 23 நிதியாண்டில் சிறந்த காவல் நிலையமாக காட்பாடி காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காட்பாடி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரியும் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட காவலர்களுக்கு சிறந்த காவல் நிலையங்களுக்கான பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

காட்பாடி காவல் நிலையம் ஆந்திர மாநில எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த எல்லையோரம் அமைந்த காவல் நிலையம் ஆனது பல்வேறு இன்னல்களை அடிக்கடி சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. போதை பொருட்கள் கடத்தல் மற்றும் மது பாட்டில்கள் கடத்தல், கஞ்சா மற்றும் விஷ சாராயம், கள்ளச்சாராயம் உள்ளிட்டவைகள் இந்த பகுதிக்கு கடத்தப்படுவது வழக்கம். அதாவது தமிழக எல்லைக்குள் ஹவாலா பணமும் ஆந்திர எல்லையில் இருந்து அவ்வப்போது ஊடுருவி வருவதும் குறிப்பிடத்தக்கது. இப்படி பல்வேறு இன்னலுடன் பணியாற்றும் போலீசார் இவற்றை அடியோடு தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்து காவல் துறையில் மேலும் ஒரு மகுடத்தை பதிய வைத்துள்ளனர். இப்படி மகுடத்தை பதித்த காட்பாடி காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போலீசார் மற்றும் சிறப்பு பிரிவு போலீசார் ஆகியோர் இதில் ஒரு குழுவாக பணியாற்றி குற்றங்கள் நடைபெறாமல் இரவு பகலா பாராமல் ஆரம்பத்திலேயே தடுத்து நடவடிக்கையை எடுத்து வந்தனர். இதற்காக அவர்களை பாராட்டும் விதமாக காவல்துறை அவர்களுக்கு வெகுமதி வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக காட்பாடியில் இல்லாத குற்ற நிகழ்வுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகம் இருந்தது.

 

இதை அவ்வப்போது கண்டுபிடித்து அதை கட்டுப்படுத்தி கட்டுக்குள் கொண்டு வந்து காட்பாடி எல்லைக்குட்பட்ட பகுதியில் போதைப்பொருள் நடமாட்டம் இல்லாத நிலையை ஏற்படுத்தி கொடுத்த காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஸ்பெஷல் டீம் என்று அழைக்கப்படும் சிறப்பு காவல் படையினருக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒவ்வொரு ஆண்டும் 10 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்கு வெகுமதி வழங்கி கௌரவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த அடிப்படையில் கடந்த 2022-23 நிதி ஆண்டில் காட்பாடி காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டது வேலூர் மாவட்டத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட காவல் நிலையத்துக்கு உண்டான பரிசுகளை வாங்கி வந்த காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட அனைவரையும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், பாராட்டி மகிழ்ந்தனர் .

 

கடமை, கண்ணியம் ,கட்டுப்பாடு என்பதை உயிர் மூச்சாகக் கொண்டு பணியாற்றும் காவலர்களே இது போன்ற பரிசுகளை தொடர்ந்து பெறுகின்றனர் என்பதும் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் குற்றங்கள் இல்லாத நிலையை கொண்டு வருவதற்கும், சமூக விரோதச் செயல்கள் அடியோடு தடுத்து நிறுத்தவும் பாடுபட்டு வரும் காவல் துறை அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் இப்படி ஒரு கௌரவம் கொடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வேலூர் மாவட்டம் தமிழகத்தில் ஒரு பின்தங்கிய மாவட்டம் என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். இருந்த போதும் இங்கு சிறப்பாக பணியாற்றி பொதுமக்களுக்கு சேவை செய்ததோடு காவல்துறையின் நற்பெயருக்கு மேலும் நற்பெயர் ஏற்படும் வகையில் பணியாற்றிய காட்பாடி காவல் நிலையத்தை சார்ந்த அனைவருக்கும் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது சாலச்சிறந்தது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள்.

Share this…

CATEGORIES
TAGS