BREAKING NEWS

காட்பாடி தாலுகாவில் உள்ள விஏஓக்கள் ஏழை எளிய மக்களை சுரண்டிப் பிழைக்கும் அவலம்!

காட்பாடி தாலுகாவில் உள்ள விஏஓக்கள் ஏழை எளிய மக்களை சுரண்டிப் பிழைக்கும் அவலம்!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகாவில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஏழை, எளிய மக்களை குறிவைத்து சுரண்டி பிழைத்து வரும் அவலம் தொடர்கதையாகியுள்ளது.வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகாவில் பல்வேறு தேவைகளுக்காக ஏழை, எளிய மக்கள் கிராம நிர்வாக அலுவலகங்களை பொதுமக்கள் பட்டா மாற்றம் மற்றும் முதியோர் பென்ஷன் உள்ளிட்ட சான்றிதழ்கள் மற்றும் பல்வேறு சான்றிதழ்களை வருவாய் துறை வழங்குவதால் இவர்களை நாடி படையெடுத்து வருகின்றனர்.

இதை நல்ல ஒரு காரணமாக வைத்துக் கொண்டு கிராம நிர்வாக அலுவலர்கள் பட்டா மாற்றத்திற்கு தலா ரூ. 20000 முதல் 40 ஆயிரம் வரையிலும், அதே போன்று ரூபாய் 5000 முதல் முதியோர் உதவித்தொகைக்கும் அதில் உள்ள பிரச்சனைகளுக்கு தகுந்தவாறு பணத்தை கடந்து விடுகின்றனர். இந்த நிலை தொடர்ந்து காட்பாடி தாலுகாவில் நிகழ்ந்து வருகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டிய கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் எதையும் கண்டும் காணாமல் இருக்கின்றனர்.

அதேபோன்று தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்டாட்சியரும் இதுபோன்ற பிரச்சனைகளை கண்டும் காணாமல் சென்று விடுகின்றனர். ஏனென்றால் இதற்கு எல்லாம் மாமூல் வசூலித்து அந்த தொகை கீழிருந்து மேல் அதிகாரிகள் வரை அந்த பணம் செல்கிறது.இதற்கு புரோக்கர்கள் தனியாக உள்ளனர். அதாவது பணம் பாதாளம் உறவை பாயும் என்பது போல உயர் அதிகாரிகளுக்கும் இதிலிருந்து ஒரு பங்கு பிரித்து தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் தங்களுக்கு இதில் அனுகூலம் உள்ளது என்பதால் உயர் அதிகாரிகள் கண்டம் காணாமல் விடுகின்றனர் இது குறித்த புகார்களை தெரிவித்தாலும் அவர்கள் காதுகளில் வாங்கிக்கொள்வதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி வருவாய்த்துறை என்ற பெயரை வைத்துக்கொண்டு வருவாயில் மட்டுமே குறியாக உள்ளனரே தவிர பணியை முடித்து கொடுப்பதில் இல்லை.

குறிப்பாக எந்த பணிக்கு எவ்வளவு தொகை என்பதை எழுதப்படாத சட்டமாக வைத்துக் கொண்டு வசூல் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர் இந்த கிராம நிர்வாக அலுவலர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படி கிராம மக்களை குறிவைத்து அவர்களது ரத்தத்தை வியர்வையை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி குடிக்கும் பணியை சத்தம் இன்றி கத்தி இன்றி ரத்தம் இன்றி செய்து வருகின்றனர் இந்த கிராம நிர்வாக அலுவலர்கள் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை.

இப்படி ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் அவரவர் பங்குக்கு அவரவர் விருப்பம் போல் பணியாற்றி தங்களது பாக்கெட்டுகளை நிரப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தடுத்து நிறுத்த வேண்டிய உயர் அதிகாரிகள் தடுக்காமல் விட்டுவிட்டது இப்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆதலால் வருவாய்த்துறை அமைச்சர் இந்த பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுத்து கிராம நிர்வாக அலுவலர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்பது இந்த கிராம நிர்வாக அலுவலர்களால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் நடுநிலையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக இது மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று நடுநிலையாளர்களும், சமூக ஆர்வலர்களும் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்படி எதற்கெடுத்தாலும் பணம் வசூல் செய்யும் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்பது அனைவரது விருப்பமாக உள்ளது.

இதை தமிழக அரசும் பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக நடவடிக்கையை கடுமையாக எடுக்க வேண்டும் என்பது அனைவரது ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

CATEGORIES
TAGS