BREAKING NEWS

காட்பாடி தெற்கு பகுதி திமுக சார்பில் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கல்!

காட்பாடி தெற்கு பகுதி திமுக சார்பில் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கல்!

வேலூர் மாவட்டம், காட்பாடி தெற்கு பகுதி திமுக சார்பில் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே கடலூர்-சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்பாடி தெற்கு பகுதி திமுக சார்பில் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது. அதாவது பிளாஸ்டிக் கண்டெய்னரில் அடைக்கப்பட்ட பிரியாணி டப்பாக்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.

இந்த பிரியாணி வழங்கும் பணியை வேலூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் டி. எம். கதிர் ஆனந்த் தொடங்கி வைத்தார். இந்த பிரியாணி வழங்கும் பணிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் காட்பாடி தெற்கு பகுதி கழக செயலாளரும், வேலூர் மாநகராட்சி துணை மேயருமான எம்.சுனில் குமார் செய்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் வேலூர் மாநகர செயலாளரும், வேலூர் தொகுதி எம்எல்ஏவுமான கார்த்திகேயன், காட்பாடி கல்புதூர் 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் அன்பு, காட்பாடி 12 வது வார்டு மாமன்ற உறுப்பினர் டீட்டா சீனிவாசன், 8வது வார்டு மாமன்ற உறுப்பினர் சீனிவாசன் மற்றும் திமுக மூத்த நிர்வாகி துரை சிங்காரம் மற்றும் பொறியாளர் அணி ஜெகதீசன், இளைஞர் அணி கமல் மற்றும் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரிசையில் வந்து இந்த பிரியாணி டப்பாக்களை வாங்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS