காட்பாடி லட்சுமி நகரில் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ள திருட்டு மணல்!
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலை ரோட்டில் உள்ள லட்சுமி நகரில் சுமார் 40 டன் அளவுள்ள ஆற்று மணல் திருட்டுத்தனமாக இரவோடு இரவாக டாரஸ் லாரிகளில் கொண்டுவரப்பட்டு குவித்து வைக்கப்பட்டுள்ளது. இது மூன்றாவது தெருவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வருவாய் துறை அலுவலர்கள் கண்டும் காணாமல் அமைதி காத்து வருகின்றனர். குறிப்பாக காட்பாடி கிராம நிர்வாக அலுவலர் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அவர்களுக்கு தெம்பு ஊட்டி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு மாமூல் வழங்கப்படுவதால் எதைப் பற்றியும் அரசுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. அரசுக்கு பெருமளவில் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.