காட்பாடி வடக்கு பகுதி திமுக சார்பில் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு 600 பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் விநியோகம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி வடக்கு பகுதி திமுக சார்பில் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு துப்புரவு பணியாளர்கள் 600 பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் விநியோகம் செய்யப்பட்டன. வேலூர் மாவட்டம், காட்பாடி வடக்கு பகுதி திமுக சார்பில் முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் வன்னியராஜா ஏற்பாட்டின் பேரில் சுமார் 600 பேருக்கு அதாவது வேலூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந் நிகழ்ச்சிக்கு வேலூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் டி .எம். கதிர்ஆனந்த் தலைமை வகித்து இலவச வேட்டி, சேலைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் வன்னிய ராஜா, காட்பாடி 1வது மண்டல குழு தலைவி புஷ்பலதா வன்னியராஜா, வேலூர் மாநகர செயலாளர், வேலூர் தொகுதி திமுக எம்எல்ஏவுமான கார்த்திகேயன் மற்றும் மூத்த நிர்வாகி துரை சிங்காரம்,5வது வார்டு வட்ட செயலாளர் விநாயகம் மற்றும் வேலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கல்புதூர் அன்பு, பழைய காட்பாடி சீனிவாசன், அறுப்புமேடு டீட்டா சீனிவாசன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் பிற அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதற்கு முன்னதாக சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள அறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு டி. எம். கதிர்ஆனந்த் மற்றும் வேலூர் மாநகராட்சி துணை மேயர் எம். சுனில் குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.