காரைக்காலில் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி அமைச்சர் சந்தர பிரியங்கா நேரில் ஆய்வு

காரைக்கால்’ ஆகஸ்ட்- 08;
காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரிமேடு சுனாமிநகர் குடியிருப்பு அருகில் அமைந்துள்ள வடிகால் வாய்க்கால் தூர்ந்து போய் உள்ள நிலையில் அதில் கழிவுநீர் கலந்திருப்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் தூர்வாரும் பணி நடைபெறுகிறது. இப்பணியை பாண்டிச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வீரசெல்வம், உதவிப் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர். இந்நிகழ்வில் கோட்டுச்சேரிமேடு மீனவ பஞ்சாயத்தார்கள் கோட்டுச்சேரி அருகில் அமைந்துள்ள இரட்டைக்குளம் தூர்வாரவும், சாலை வசதிகளை மேம்படுத்தவும் மின்விளக்குகளை சரி செய்து தரும்படியும் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். அமைச்சர் விரைவில் சரி செய்து தரப்படும் என மீனவபஞ்சாயத்தார்களிடம் உறுதி அளித்தனர்.
