காலை 8 மணிக்கு துவங்கிய 61வது கோடை விழா தற்போது வரை கலை நிகழ்ச்சிகள் உட்பட மேடைப் பணிகள் தொய்வாக நடைபெறுவதாக சுற்றுலாப் பயணிகள் வேதனை
திண்டுக்கல் மாவட்டம் உலக சுற்றுலா தலங்களில் ஒன்றான மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் சுற்றுலா தளங்களை காண்பதற்காகவும் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும் ஏப்ரல் மே மாதங்களில் வெயிலிலிருந்து குளிர்ச்சியை ரசிப்பதற்காக அதிக அளவு சுற்றுலா பயணிகள் தமிழக மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள் பல்வேறு நாடுகளில் இருந்து கொடைக்கானலுக்கு வருகை தருவது வழக்கம் வருடா வருடம் கொடைக்கானலில் தோட்டக்கலைத்துறை நகராட்சி வேளாண்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்பாக மாவட்ட நிர்வாகம் கோடை விழா நடத்தி வருகிறது .
இதில் 61 வது கோடை விழா இன்று காலை 8 மணிக்கு துவங்கியது கோடை விழாவின் முக்கிய நிகழ்வான மலர் கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்திழுக்கும் கலைநிகழ்ச்சிகளில் முக்கிய நிகழ்வாக தமிழகத்தின் பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் என தொடர்ந்து நடைபெறும் இந்நிலையில் மலர் கண்காட்சி துவங்கப்பட்டு தற்போது வரை கலை நிகழ்ச்சிகள் துவங்கும் மேடை பணி தாமதமாக நடைபெற்று வருகிறது.
இதில்அதிகாரிகளும் மிகப்பெரிய ஆர்வம் காட்டாததால் கோடை விழாவில் அனைத்து நிகழ்ச்சிகளும் மிகவும் மந்தமாக நடைபெறுவதாக பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டுகின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில்… கொடைக்கானலை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகளுக்கும், பொது மக்களுக்கும் நுழைவு கட்டணம் குறைக்கப்படும் மேலும் தொடர்ந்து பத்து நாட்கள் கலை நிகழ்ச்சி நடத்தப்படும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடன் வருபவர்களுக்கு நுழைவு கட்டணம் இலவசம் என்றும் கூறினார்…