BREAKING NEWS

கிராமசபை கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது

பிள்ளைகளை கல்லூரி வரை கட்டாயம் படிக்க வைக்க வேண்டும், திருபுவனம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் பேச்சு

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் திருபுவனம் ஊராட்சியில் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. திருபுவனம் ஊராட்சி மன்ற தலைவர் அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் பேசும் போது 18 வயதுக்கு குறைவான பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.மேலும் ஆண்.பெண் பிள்ளைகளை கல்லூரி வரை கட்டாயம் உயர்கல்விவரை படிக்க வைக்க வேண்டும், என அறிவுரை வழங்கி பேசினார். இந்த கூட்டத்தில் அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர், ஒன்றியக்குழு துணை தலைவர், திட்ட அலுவலர், கோட்டாட்சியர், பாபநாசம் . வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர், மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை. வேளாண்துறை தோட்டக்கலைத்துறை உள்பட, அனைத்து த்துறை அலுவலர்கள். பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

CATEGORIES
TAGS