கிராம கோயிலான கெளரி மாரியம்மன் ஆலய தீமிதி வயல் வெளியில் நடைபெற்றது.
கிராம கோயிலான கெளரி மாரியம்மன் ஆலய தீமிதி வயல் வெளியில் நடைபெற்றது. ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தீமிதியை கண்டு களித்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ளது கோடங்குடி கிராமம். இங்கு மிக பழைமையான கிராம கோயிலான கெளரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சித்திரை திருவிழாவை முன்னிட்டு தீமிதி உற்சவம் நடைபெற்றது தீமிதியையொட்டி .
அம்மன் அலங்கரிக்கபட்டு தீ குண்டம் எதிரில் அமைக்கபட்டு,கரகம் அலகு காவடிகள் வீதியுலா வந்து வயல் வெளியில் அமைக்கப்பட்டு இருந்த தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். இத் தீமிதி திருவிழாவில் 1000 க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதியை கண்டு களித்தனர்.
பின் பக்தர்கள் கண்டு களிக்க காளி ஆட்டத்துடன்,வாண வேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது