BREAKING NEWS

கிருஷ்ணராயபுரம் அருகே மணவாசி கிராமம் கோரகுத்தியில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில் முப்பூசை திருவிழாவை

கிருஷ்ணராயபுரம் அருகே மணவாசி கிராமம் கோரகுத்தியில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில் முப்பூசை திருவிழாவை முன்னிட்டு மாயனூர் காவிரி ஆற்றில் இருந்து சுவாமிகள் கரகம் பாலித்து அழைத்து சென்றனர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மணவாசி கிராமம் கோரகுத்தியில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, வீரபத்திரன், புடவைக்காரி,மதுரை வீரன், இருளப்பன், உக்கரண்டி கருப்பு, சந்தன கருப்பு, பட்டவன் போன்ற பரிவார தெய்வங்களின் மூன்று நாள் முப்பூசை திருவிழா தொடங்கியது.

முதல் நாள் திருவிழாவான காலை மாயனூர் ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் காவேரி ஆற்றுப்படுத்துறையில் இருந்து கரகம் பாலித்து மேளதாளங்களுடன் கோவில் வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு 12 மணியளவில் மயான பூஜை நடைபெற்றது.

இரண்டாவது நாள் திருவிழாவான தலைக்கட்டு பொங்கல் வைத்தல் மற்றும் இரவு புடவைக்காரி அம்மனுக்கு சூலாட்டு பூஜை நடைபெற உள்ளது. மூன்றாவது நாள் திருவிழாவான கிடா வெட்டுதல் மதுரை வீரன் சுவாமிக்கு அடசல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

Share this…

CATEGORIES
TAGS