குடிதண்ணீர் வழங்காத பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்த நம்பாக்கம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் மேல்நிலை தொட்டி மூலம் கிராம் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதகாலமாக கிராம் மக்களுக்கு சரிவர குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக கிராமமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் முனிவேல் என்பவரிடம் பலமுறை தெரிவித்தும் பஞ்சாயத்து நிர்வாகம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் அன்றாட பணிக்கு செல்லும் பொதுமக்கள் குளிப்பதற்கும் குடிப்பதற்கும் தண்ணீரின்றி அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் திருவள்ளூரில் இருந்து பிளேஸ்பாளையம் வரை செல்லும் அரசு பேருந்தை சிறைப்பிடித்து காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து தகவல் அறிந்த பென்னாலூர்பேட்டை காவல் துறையினர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம் மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனாலும் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என கிராம பொதுமக்கள் திட்டவட்டமாக தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.