குடிநீர் விநியோகம் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அவசர ஆலோசனை!

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஊரக பகுதிகளில் கோடை காலங்களில் சீரான குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வுக்கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு முதன்மைச் செயலாளர். செந்தில்குமார் தலைமையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்தது .இதில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் .
கூட்டத்தில் குடிநீர் விநியோகம் தொடர்ந்து நிறுத்தாமல் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. குடிநீர் பிரச்சனைகள் எங்கெல்லாம் தலைவிரித்து ஆடுகிறதோ அங்கு போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க ஆவண செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
அப்படி இந்த மூன்று மாவட்டங்களில் எங்கெல்லாம் குடிநீர் தட்டுப்பாடு காணப்படுகிறது என்றும் கணக்கெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.